I expect to pass through this world but once. Any Good therefore that I can do, or any kindness that I can show to any fellow creature let me do it now. Let me not defer or neglect it, for I shall not pass this way again
இந்த இணைய தளத்தில் உங்கள் பிரச்சனைகளை வெளியிடலாம். பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி தெரியாமல் தடுமாறும் நண்பர்களுக்கு இந்த தளம் வழிகாட்டும்.
இந்த தளத்தில் உங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக நீங்கள் அனுப்பிய விண்ணப்பங்களுக்கு முப்பது நாட்கள் ஆகியும் எந்த ஒரு பதிலும் பெறப்படவில்லை என்றால் உரிய ஆதாரங்களுடன் அளித்தால் இந்த தளத்தில் வெளியிடப்படும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட தகவல்களுக்கு வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் வழங்கவில்லை என்றாலும் அல்லது உரிய சரியான தகவல்களை பொது தகவல் அலுவலர் தரவில்லை என்றாலும் இத்தளத்தில் நீங்கள் பொது தகவல் அலுவலரிடம் கோரிய தகவல்களை / அவர் அளித்த தகவல்களையும் scan செய்து pdf file ஆக கொடுத்துள்ள email id க்கு அனுப்பி வைத்தால் அவைகள் இத்தளத்தில் வெளியிடப்படும்.
எவருக்கும் எதிரானது அல்ல இந்த தளம். பிரச்சனைகளின் தீர்வுக்கான தளம் மட்டும் அல்ல. இது சட்ட உரிமை பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் தளமும் கூட.
விண்ணப்பதாரர் அளிக்கும் விண்ணப்பம் இந்த தளத்தில் வெளியிடுவதற்கு முன் யாருக்கு விண்ணப்பம் முகவரி இடப்பட்டு இருக்கிறதோ அவருக்கு/அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட நாளில் இருந்து பத்து நாட்களுக்குள் பதில் அல்லது ஆட்சேபணை ஏதும் பெறப்படவில்லை என்றால் இந்த தளத்தில் அனைவரின் பார்வைக்கும் விண்ணப்பத்தாரர் அளித்த விண்ணப்பம்/ ஆவணங்கள் வெளியிட ப்படும்.
இத்தளத்தை பார்வையிடுவோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
இந்த தளம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கலாம். வழி காட்டலாம். உதவி கூட செய்யலாம்.
உரிய தீர்வுகளுக்கு சட்ட ஆலோசனைகள் உரிய வல்லுநர்களை கொண்டு வழங்கப்படும். விருப்பம் உள்ள மனுதாரர்கள் எங்கள் ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தீர்வு நீதி மன்றம் மூலமாக பெற்றுத்தர விருப்பம் உள்ள வழக்கு அறிஞர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
CONTACT US
எங்களை தொடர்பு கொள்ள கொடுத்து உள்ள படிவம் சரியாக செயல்படவில்லை. எனவே எங்கள் ஈமெயில் க்கு விவரங்களை அனுப்புங்கள்.
urvasanth2021@gmail.com
Since the contact form has some technical problem kindly avoid contact forum and contact us through the following mail id :